தெய்வங்களை விக்ரஹங்களிலோ, படங்களிலோ கலசத்திலோ பிரதிமைகளிலோ பூஜை செய்யலாம். இதைப்போன்றே தெய்வங்களை பூஜை செய்ய யந்திரம் என்று ஒன்று உண்டு,
அதாவது தங்கம், வெள்ளி அல்லது தாமிர(சொப்பு)த் தகட்டில் ஒரு சில கட்டங்கள் சதுரமாகவும் வட்டமாகவும் வரைந்து அதில் அந்தந்த தெய்வத்தின் மற்றும் பரிவார தேவதையின் மந்திரங்களை ஒவ்வொன்றாக எழுதப்பட்டிருக்கும், இதுவே யந்திரம் என்று கூறப்படுகிறது. இந்த யந்திரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறானதாக இருக்கும்.
யந்திரத்தில் தெய்வங்களை ஆவாஹனம் செய்து பூஜை செய்வார்கள். விக்ரஹம் ப்ரதிமைகளை விட இப்படிப்பட்ட யந்திரத்திற்கு சக்தி அதிகம், இதில் வட்டம், சதுரம், த்ரிகோணம், ஷட்கோணம் என பலவித வடிவங்கள் (ஷேப்) இருக்கும். இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு தேவதையைக் குறிக்கும்.
இந்த யந்திரத்தைத் தயார் செய்யும் போது சில நியமங்களை கடைபிடிக்க வேண்டும், அதாவது யந்திரம் எழுதும்போது அந்தந்த தெய்வத்திற்குகந்த நாளில், குறிப்பிட்ட எழுதுகோலால் , குறிப்பிட்ட பாஷையில் குறிப்பிட்ட நபரால் எழுதப்பட வேண்டும்.முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்த தெய்வத்தின் மந்திரத்தை குறிப்பிட்ட அளவு ஜபம் செய்து தினஸரி பூஜையும் குறிப்பாக அதிக அளவில் நிவேதனமும் செய்யப்பட வேண்டும்,
மேலும் இந்த யந்திரத்தில் ஒரு வட்டத்திற்குள் இருக்கும் எழுத்துக்கள் மற்றொரு வட்டத்துக்குள் இருக்கும் எழுத்துக்களோடு சேர்ந்துவிடக்கூடாது, ஏனென்றால் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனி சக்தி உண்டு, இவைகள் ஒன்றோடொன்று சேர்ந்தால் விபரீத (எதிரிடையான)பலனைத்தரும்.
இவ்வளவு நியமத்துடன் எழுதப்பட்டு பாதுகாக்கப்படும் யந்திரம்தான் முழுமையான பலனைத்தரும். ஆகவேதான் நமது முன்னோர்கள் பஞ்சாயதனங்களிலும் படங்களிலும் விக்ரஹங்களிலும் பூஜை செய்தார்களே தவிர யந்திரங்களை வீட்டில் வைத்து பூஜை செய்வதை அநேகமாக தவிர்த்து வந்தார்கள்.
ஏனென்றால் தகட்டில் எழுதப்பட்ட மந்திரங்கள் (எழுத்துக்கள்) ஒருசில மாதங்களில் அழியத்துவங்கிவிடும். வட்டம், சதுரத்தில் சிறிது அழிந்தால் அந்த வட்டத்திற்குள் இருக்கும் (ஆவரண) தேவதையின் சக்தி மற்றொரு வட்டத்திற்குள் நுழையும். இது எதிரிடையான பலனைத்தரும்.
தற்காலத்தில் பலபேர்களின் வீட்டில் பூஜையில் நிறைய யந்திரங்கள் வைத்திருப்பதைக் காண்கிறோம். ஆங்காங்கே பொதுவாக நடைபெறும் பூஜை, ஹோமங்களில் கலந்து கொள்பவர்களுக்கு ப்ரஸாதமாக யந்திரம் தரப்படுகிறது. ஒருசில பத்திரிகைகளும் இவ்வகையான யந்திரத்தை விநியோகிக்கின்றன. இவைகளை வாங்கிவந்து வீட்டில் வைக்கிறார்கள்.
இந்த யந்திரம் ஸரியான முறையில் ஸரியான நபரால் ஸரியான காலத்தில் எழுதப்பட்டு ஸரியான முறையில் பூஜை செய்யப்பட்டதா! என்பது நமக்குத் தெரியாது. இவ்வாறு அனைத்தும் ஸரியாக நடைபெற்றிருந்தாலும் கூட சிலநாட்களில் யந்திர எழுத்துக்கள் புள்ளிகள் சிறிது சிறிதாக அழிவதை யாராலும் தடுக்க இயலாது. இதனால் வீட்டில் கலஹம், குழப்பம், வீண்வாக்குவாதம், ஏழ்மை முதலான துன்பங்கள் ஏற்படுகின்றன.
இவைகளை ஆராயும்போது கூடியவரை இந்த யந்திரங்களை வாங்கி வந்து பூஜையில் வைப்பதை தவிர்க்கலாம்எனத்தோன்றுகிறது.ஆனால் பல ஆண்டுகளாக ஒருசிலரின் வீட்டில் முன்னோர்களால் பூஜிக்கப்பட்டு தற்சமயம் முறையாக பூஜிக்கும் யந்திரங்கள் இதற்கு விதிவிலக்கு.
பஞ்சாயதனம் அல்லது தெய்வத்திருஉருவங்கள் அல்லது விக்ரஹமே நமக்குப் போதும். இந்த யந்திர பூஜை நமக்குத் தேவையில்லை.
ஆகவே நாம் கூடியவரை நமதுவீட்டில் பூஜையறையில் மேன்மேலும் தெய்வ சக்தியை அதிகரிக்க வேண்டுமானால் (தெய்வசக்தியை வெளியேற்றும்) (யந்திரம் போன்றவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும், ஸ்ரீபகவான் ரக்ஷிக்கட்டும்
Family Aacharya online
we are bringing out the spiritual monthly VAITHIKASRI with Sri RAJAGOPALA GANAPATIGAL as its editor. The magazine will serve as a spiritual guide to all the religious minded theists and will focus on the innumerable precious thoughts and views contained on our three Veda Sastra.
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
VAITHIKASRI PUBLICATIONS
- Daily Mantras Audio cd-Rs. 100+20=120.00
- Dharma Sastram
- Dharma Sastram Part-1
- Dharma Sastram Part-2
- Pithru Poojanam
- Sandeha Nivaranee (Tamil) Parts 1 - Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 2 - Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 3- Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 4 - Rs 60+20 =Rs 80
- Subhashithani (Precepts)
Blog Archive
-
▼
2007
(12)
-
▼
December
(12)
- SANDEHA NIVARANEE Part-2
- SANDEHA NIVARANEE Part-1 This Book clarifies man...
- Subhashithani (Tamil) Part 1) ஸுபாஷிதங்கள் - நன்மொ...
- ஸந்தேஹ நிவாரணீ பாகம் 4 - ஸந்தேஹங்களின் அட்டவனை
- ஸந்தேஹ நிவாரணீ 3வது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்
- SANDEHA NIVAARANEE-AUTHOR- Nannilam Brahmasri Raja...
- DAINANDIKA MANTRAAH
- The Doctrine of Righteousness (Dharma) or Dharma ...
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது கூடாது
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது கூடாது
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-1
- vaithikasri issue december 2007 month editorial
-
▼
December
(12)
Rajagopala Ganapatigal
- Rajagopala ganapatigal
- chennai, Tamil Nadu, India
- Sri V.Ragagopala Ganapatigal hails from a family of Deekshithars (Vedic scholars who have performed yagna sacrifices and are performing Agni hotric rites daily throughout their life time)
No comments:
Post a Comment